வீட்டில் அடங்கி இருங்கள்! இல்லையென்றால் சுட வேண்டி இருக்கும்! தெலுங்கானா சிஎம் அதிரடி!

25 March 2020 அரசியல்
chandrashekarrav.jpg

உலகம் முழுவதும், கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. தற்பொழுது வரை 19,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். மூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நோயானது, தற்பொழுது இந்தியாவிலும் தன்னுடைய கோர முகத்தினைக் காட்ட ஆரம்பித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 600 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரஸால் இந்திய அளவில் பத்தும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இதனை முன்னிட்டு, மார்ச் 24ம் தேதி அன்று பொதுமக்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, ஏப்ரல் 14ம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது எனவும், யாரும் வெளியில் தேவையில்லாமல் நடமாட வேண்டாம் எனவும் கூறினார்.

இதனால், அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், இதனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் பலரும் சாலையில் நடமாடுகின்றனர். இதனை முன்னிட்டு, தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. அது முடிந்ததும் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் தெலுங்கானா முதல்வர்.

அவர் பேசுகையில், ஊரடங்கு உத்தரவினை மதிக்காமல் பலரும் சாலையில் நடமாடுகின்றனர். இதனால், போலீஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அனுமதி அளித்துள்ளார். மேலும், தொடர்ந்து இது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபட்டால், இந்திய இராணுவத்தினை துணைக்கு அழைப்பேன் எனவும், அவர்கள் மூலம் சாலையில் நடமாடுபவர்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார். இது தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS