கருணை இல்லாதவர்களுக்கு கருணை காட்டக் கூடாது- தமிழிசை பேச்சு!

09 December 2019 அரசியல்
tamilisaisoundararajan12.jpg

கருணையே இல்லாதவர்களுக்கு, கருணை காட்டக் கூடாது என, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், குடியரசுத் தலைவர் பேசியதைப் போல, பாலியல் குற்றங்களுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு கருணை காட்டக் கூடாது. கருணையே இல்லாதவர்களுக்கு கருணை மனு எதற்கு?

ஆக, இந்த நாடு எங்கேப் போய் கொண்டு இருக்கின்றது. நம் அனைவருக்குமே கடமை இருக்கின்றது. தாயாக இருக்கட்டும், ஆசிரியையாக இருக்கட்டும், அதிகாரியாக இருக்கட்டும், அரசியல்வாதியாக இருக்கட்டும், யாராக வேண்டும் என்றாலும் இருக்கட்டும், ஆனால் அவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

விவேகானந்தர் சொன்னார், எந்த நாட்டில் பெண்கள் சமமாக மதிக்கப்படுகின்றார்களோ, அந்த நாடு தான் முன்னேற முடியும். ஒரு பறவை பறக்க வேண்டும் என்றால், ஒற்றை இறகுடன் பறக்க முடியாது. ஆக, ஆண் என்ற இறகும் வேண்டும், பெண் என்ற இறகும் வேண்டும். ஆண் என்ற இறகும், பெண் என்ற இறகும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான், நாடு என்றப் பறவை சுதந்திரமாக வளர்ச்சியை நோக்கிப் பறக்க முடியும்.

HOT NEWS