டெல்லியில் மொபைல் சேவைக்குத் தடை! மத்திய அரசு அறிவித்துள்ளது! ஏர்டெல் விளக்கம்!

19 December 2019 அரசியல்
delhiprotest12.jpg

டெல்லியில் நடைபெற்று வரும் தேசியக் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டம், தற்பொழுது உச்சக் கட்டத்தினை எட்டியுள்ளது. அங்குள்ளப் பலப் பகுதிகளில், போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஒரு சில இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அங்கு இயங்கி வரும் மெட்ரோ இரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என, டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. டெல்லியில் அனைந்துள்ள செங்கோட்டைப் பகுதியில், போராட்டக்காரர்கள் முற்றுகையிட உள்ளனர் என்றத் தகவல் பரவியதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வெளி மாநிலங்களில் இருந்து, டெல்லியினை நோக்கிப் படையெடுத்துள்ளனர் போராட்டக்காரர்கள் தகவல் பரவியதனைத் தொடர்ந்து, டெல்லியின் எல்லைப் பகுதிகளில் போலீஸ் மற்றும் துணை இராணுவப் பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதிகளில் அமைந்துள்ள கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.

போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்காக, எஸ்எம்ஸ், இண்டர்நெட் மற்றும் தொலைத் தொடர்பு வசதியினை மத்திய அரசு நிறுத்தக் கூறியதன் அடிப்படையில், தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக, ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் கூறியுள்ளன. மத்திய அரசு அனுமதி அளித்ததும் மீண்டும் சேவைகள் வழங்கப்படும் என, அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

தற்பொழுது, டெல்லியானது காஷ்மீரினைப் போலக் காட்சியளிப்பதாக, அங்கு வசிக்கும் மக்கள் கவலைத் தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS