மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும், வருகின்ற ஜூன் 1ம் தேதி முதல் திறக்கப்படும் என, மேற்கு வங்க முதல்வர் மம்மதா பேனர்ஜி கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல், ஊரடங்கானது பின்பற்றப்படுகின்றது. இதனையொட்டி, பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொதுஇடங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுப் போக்குவரத்து உள்ளிட்டவைத் தடை செய்யப்பட்டு உள்ளன.
அனைத்து கோயில்களும், வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில், தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவி வருவதால், கோயில்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என, கர்நாடக முதல்வர் எடியூரப்பா கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க, மேற்கு வங்க முதல்வர் மம்மதா பேனர்ஜி அனுமதி அளித்தார். அதன்படி, வருகின்ற ஜூன் 1ம் தேதி முதல், அம்மாநிலத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட உள்ளன.