சீனாவில் உள்ள தற்காலிக மருத்துவமனைகளில் இருந்து வந்த நோயாளிகள் குணமடைந்ததால், விரைவில் அந்த மருத்துவமனை மூடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில், கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் பரவியது. இந்த வைரஸால் சீனாவில் 88,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். அதில், 4,200 பேர் மரணமடைந்தனர். இந்நிலையில், இந்த நோயினால், பாதிக்கப்பட்டிருந்த அனைத்து நோயாளிகளும் சீனாவில் பூரண குணமாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்குள்ள மருத்துவர்கள் தற்பொழுது, நிம்மதி அடைந்து உள்ளனர். இந்த நோயால் ஊஹான் பகுதியில் தற்காலிகமாக, 16 மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு இருந்தன. அவைகளில் இருந்த நோயாளிகள் குணமானைத் தொடர்ந்து, கடந்த வாரம் அந்த மருத்துவமனைகள் மூடப்பட்டன. அது மட்டுமின்றி, இரண்டு பெரிய தற்காலிக மருத்துவமனைகளை சீன அரசாங்கம் உருவாக்கி இருந்தது.
இந்த மருத்துவமனைகளில் தற்பொழுது நோயாளிகள் இல்லை. அந்த அளவிற்கு, அங்குள்ள நோயாளிகள் அனைவரும் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். இதனைத் தொடர்ந்து நாளை(29-04-2020) அந்த மருத்துவமனைகள் மூடப்பட உள்ளதாக, சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகிலேயே முதன் முதலாக, இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த சீனா, தற்பொழுது முதல் நாடாக மீண்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.