10 இந்திய வீரர்களை விடுவித்த சீன இராணுவம்! தொடரும் பேச்சுவார்த்தை!

19 June 2020 அரசியல்
ladakhlatest.jpg

கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இந்தியா மற்றும் சீன வீரர்களுக்கு இடையில் பிரச்சனையின் பொழுது கைது செய்த 10 இந்திய வீரர்களை சீன இராணுவம் தற்பொழுது விடுவித்துள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடந்த மே மாதம் முதல், லடாக் பகுதியில் மோதல் நிலவி வருகின்றது. இந்த நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி அன்று, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய வீரர்களை, சீன இராணுவத்தினர் கடுமையாகத் தாக்கினர். இந்தத் தாக்குதலால் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த சம்பவம், இரண்டு நாட்டிற்கு இடையிலும் மிகப் பெரிய பிளவினை உருவாக்கி உள்ளது. நாங்கள் சமாதானத்தினையே விரும்புகின்றோம். எனவே, பேச்சுவார்த்தையின் மூலம் இதற்கு தீர்வு காண்போம் என, சீத தூதார சாவோ லிஜின் கூறினார். மேலும், கல்வான் பள்ளத்தாக்கு சீனாவிற்கு சொந்தமானது எனவும் கூறியுள்ளார்.

இதற்கு இந்திய அரசு, கடும் கண்டனத்தினைப் பதிவு செய்துள்ளது. மேலும், இந்தியா அமைதியினை விரும்பும் நாடு, ஆனால், இது போன்றவைகளை சகித்துக் கொண்டு இருக்க முடியாது என, பாரதப் பிரதமர் மோடி கூறினார். ஜூன் 16ம் தேதி முதல், இரு நாட்டு இராணுவத்தின் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவின் தரப்பில் இருந்து எவ்வித வீரர்களும் சீன இராணுவத்தால் கைது செய்யப்படவில்லை என்ன, இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இருப்பினும், தி பிரிண்ட் என்ற செய்தி நிறுவனம் தற்பொழுது நடந்து வரும் பேச்சுவார்த்தையின் காரணமாக சீனாவினால் கைது செய்யப்பட்ட 10 இந்திய வீரர்கள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர் என்று கூறியுள்ளது.

Source:theprint.in/diplomacy/10-indian-soldiers-including-four-officers-released-by-china-after-talks/444544/

HOT NEWS