இந்தியா-சீனா படைகள் வாபஸ்! பதற்றம் தணிந்தது!

10 June 2020 அரசியல்
indiaattackpok.jpg

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எல்லைப் பகுதியில் நீடித்து வந்த பதற்றமானது, தற்பொழுது முடிவிற்கு வந்துள்ளது.

இந்திய இராணுவ வீரர்களுக்கும், சீன இராணுவ வீரர்களுக்கும் இடையில் மே 5ம் தேதியின் பொழுது, மோதல் ஏற்பட்டது. பாங்காங் ஏரியில் சீன வீரர்கள் கப்பலில் வேகமாக சென்றனர். அதுமட்டுமின்றி, ஹெலிகாப்டரிலும் அவர் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 250க்கும் அதிகமானோர் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இந்த சூழ்நிலையில், இது குறித்து இரண்டு நாட்டு உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பிரச்சனையின் காரணமாக, சீன இராணுவம் தன்னுடைய பத்தாயிரம் வீரர்களை எல்லைப் பகுதியில் நிறுத்தினர். மேலும், 3200 கிலோமீட்டர் உள்ள எல்லைப் பகுதியினை கடந்து வந்தது. இதனால், ஜே15, ஜே16 விமானங்களையும் நிலை நிறுத்தியது. இதனால், இந்திய இராணுவமும் தன்னுடைய இராணுவ தளவாடங்களை நிலை நிறுத்த ஆம்பித்தது.

இரண்டு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் ஏற்பட்ட போர் பதற்றத்தினைத் தணிப்பதற்காக, இரண்டு நாட்டு உயரதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். 14வது முறை நடந்த பேச்சுவார்த்தையில், ஒரு சில விஷயங்களை சீனா ஏற்றுக் கொண்டது. அத்தோடு, இந்தியா தன்னுடைய இராணுவ கட்டமைப்பினை, லடாக் பகுதியில் நிறுத்த வேண்டும் என்றுக் கூறியது.

இதனால், தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நீடித்து வந்தது. இருப்பினும், இந்தியா தன்னுடையக் கட்டமைப்பினை நிறுத்தமாட்டோம் என்றுக் கூறுயது. இந்நிலையில், தற்பொழுது 2500 கிலோமீட்டர்கள் தன்னுடையப் படையினை அழைத்துக் கொண்டு, பின்வாங்கியுள்ளது சீனா இராணுவம். இதனை, பல நிறுவனங்கள் செய்தியாக வெளியிட்டு வருகின்றன.

HOT NEWS