பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாற்றம்! தேர்வு தேதி மாற்றி அமைக்கப்பட்டது!

19 May 2020 அரசியல்
sengottaiyan1212.jpg

வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறுவதாக இருந்த, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வானது மாற்றியமைப்பட்டது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, தற்பொழுது அமலில் உள்ளது. வருகின்ற மே-31ம் தேதி வரை, இந்த உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் பல தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறாமல் இருந்து வந்த பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்து, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

வருகின்ற ஜூன் 1ம் தேதி முதல், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்றுக் கூறினார். மாணவர்கள் படிக்கின்ற அந்தந்தத் தேர்வுகளிலேயே பொதுத் தேர்வு நடைபெறும் என்றுக் கூறினார். இதனிடையே பொதுத் தேர்வு நடைபெறுவதில் உள்ள சிக்கல்கள் பற்றியும், அதற்கு எடுக்க வேண்டிய முதற்கட்ட நடவடிக்கைகள் பற்றியும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, இன்று காலையில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு நடைபெறும் தேதி குறித்து, புதிய அறிவிப்பினை அவர் வெளியிட்டார். அதன்படி, ஜூன் 15ம் தேதி அன்று மொழிப் பாடத்திற்கான தேர்வும், ஜூன் 17ம் தேதி அன்று ஆங்கிலத் தேர்வும், ஜூன் 19ம் தேதி அன்று கணிதமும், ஜூன் 22ம் தேதி அன்று அறிவியல் பாடமும், ஜூன் 24ம் தேதி அன்று சமூக அறிவியல் பாடத் தேர்வும் நடைபெறும் என அறிவித்தார். ஜூன் 20ம் தேதி அன்று, விருப்ப மொழிக்கானத் தேர்வும் நடைபெறும் என்றுக் கூறியுள்ளார்.

இதனால், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, இதற்கு எதிர்கட்சியினரும், ஆசிரியர் சங்கங்களும் வரவேற்பு அளித்துள்ளனர்.

HOT NEWS