பத்தாம் வகுப்பு மதிப்பெண் வழங்குவதில் குழப்பம்! காலாண்டு, அரையாண்டு தேர்விற்கு வரவில்லை என்றால் ஆப்சென்ட்!

06 July 2020 அரசியல்
publicexam.jpg

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு மதிப்பெண் வழங்குவதில், குழப்பம் நீடித்து வருகின்றது.

கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி அன்று, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, பிறப்பிக்கப்பட்டது. இதனால், தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வானது தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவிக் கொண்டே இருந்ததால், கடந்த ஜூன் 15ம் தேதி அன்று, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெறும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இருப்பினும், பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஒருசிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். திமுக உள்ளிட்டப் பலக் கட்சிகளும் இந்த தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், முதல்வருடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் செங்கோட்டையன், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வானது, ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

மேலும், ஏற்கனவே நடந்து முடிந்திருந்த காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்களை வைத்து மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கவும், வருகைப் பதிவேட்டினைக் கணக்கில் வைத்து, 20 மதிப்பெண்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனிடையே, பலப் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் மோசடி நடைபெற்றதாக கூறப்படுகின்றது. அதுமட்டுமின்றி, புதிய சிக்கல்களும் ஒவ்வொரு நாளும் எழுந்த வண்ணம் உள்ளன.

காலாண்டு அரையாண்டுத் தேர்வுகளுக்கு வராத மாணவர்களுக்கு தற்பொழுது ஆப்சென்ட் எனக் குறிப்பிடப் பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவினை பிறப்பித்து உள்ளது.

HOT NEWS