பொதுத்தேர்வு ரத்து! தலைவர்கள் வரவேற்பு! மார்க் எப்படி கணக்கீடு தெரியுமா?

10 June 2020 அரசியல்
epscoronaa.jpg

தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதற்கு, தமிழக அரசியல் தலைவர்கள் தங்களுடைய பாராட்டுக்களைத் தெரிவித்து உள்ளனர்.

இந்தியா முழுவதும் வருகின்ற ஜூன் 30ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், வருகின்ற ஜூலை மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து, அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், தமிழகத்தில் வருகின்ற ஜூன் 15ம் தேதி தொடங்கி, பத்தாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வி ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் சங்கம் சார்பில், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், பத்தாம் வகுப்புத் தேர்வினை தள்ளி வைக்க வேண்டும் என்றுக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கானது ஜூன் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியினை சந்தித்த, செங்கோட்டையன் தீவிர ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வானது, கொரோனா பாதிப்பின் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும், காலாண்டு பரிட்சையில் எடுத்த மதிப்பெண், அரையாண்டுத் தேர்வில் எடுத்த மதிப்பெண் ஆகியவற்றினை 80% மதிப்பெண்ணாகவும், வருகைப் பதிவேட்டினை 20% ஆகவும் கணக்கிட்டு மொத்த மதிப்பெண்களை வழங்கவும் உத்தரவிட்டு உள்ளார்.

இதற்கு தமிழகத்தின் பல தலைவர்களும் தங்களுடைய வரவேற்பினையும், பாராட்டுக்களையும் தெரிவித்து உள்ளனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் இது பற்றி வெளியிட்டுள்ள பதிவில்,

காலாண்டுத் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு பரிட்சை நடத்தப்பட்டது. அதனை 80% ஆக எடுத்துக் கொள்ள உள்ளனர். மேலும், அரையாண்டுத் தேர்வில் 500 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. அதனையும் 80% ஆக எடுத்துக் கொள்ள உள்ளனர். மொத்தமாக, கூட்டினால் ஒரு சதவிகிதம் வரும். அந்த சதவிகிதத்துடன் 20% மதிப்பெண்களை வருகைப் பதிவேட்டிற்காக இணைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

HOT NEWS