தெலுங்கானாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பாஸ்! முதல்வர் அறிவிப்பு!

08 June 2020 அரசியல்
chandrashekarrav.jpg

தெலுங்கானா மாநிலத்தின் 10ம் வகுப்பு மாணவர்கள், தேர்வின்றி பாஸ் செய்யப்படுவதாக, முதலமைச்சர் சந்திர சேகர ராவ் அறிவித்துள்ளார்.

தற்பொழுது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஜூலை மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து, விரைவில் அறிக்கை வெளியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது இதனால், அதற்கு முன் வரை யாரும் பள்ளிகளைத் திறக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இன்னும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படாமல் உள்ளது. தெலுங்கானா மாநிலத்திலும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படாமல் உள்ளது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் இந்தத் தேர்வினை நடத்த வேண்டாம் என்றுக் கோரிக்கை விடுத்தனர். இந்த சூழ்நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, இன்று மாலையில் அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன்படி, தற்பொழுது பத்தாம் வகுப்புப் படித்து வருகின்ற மாணவர்கள் அனைவரும், தேர்வில்லாமல் தேர்ச்சி பெறுவதாக அறிவித்தார். இதனைத் தற்பொழுது, தெலுங்கானா மக்கள் வரவேற்று வருகின்றனர்.

HOT NEWS