தீவிரவாதிகள் ஊடுறுவல் எதிரொலி! போலீஸ் வளையத்தில் தமிழகம்!

23 August 2019 அரசியல்
is.jpg

தமிழகத்தில் லஷ்கர்-ஈ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள், தமிழகத்தில் ஊடுறுவி உள்ளதாக, உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனை அடுத்து, தமிழகத்தின் முக்கிய இடங்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது கிடைத்தத் தகவலின் படி, ஒரு பாகிஸ்தானியரும், ஐந்து இலங்கையைச் சேர்ந்த நபர்களும் தற்பொழுது தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஊடுறுவி இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து, தமிழக காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. தொடர் வாகன சோதனை, போக்குவரத்துக் கண்காணிப்பு, சிசிடிவி கேமிரா மூலம் கண்காணிப்பு, ரோந்து பணி, முக்கிய இடங்களுக்கு அதிக பாதுகாப்பு, மக்கள் அதிகம் உள்ள இடங்களுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், திருச்சி ஸ்ரீரங்கம் உட்பட பல மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களுக்கு உச்சகட்டப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நபர்களின் புகைப்படங்களையும், காவல்துறை வெளியிட்டுள்ளது.

யாராவது சந்தேகப்படும் படி நடமாடினால், 100ஐ அழைத்துத் தகவல் அளிக்கும் படி, தமிகழகக் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

HOT NEWS