முக்கியத் தீவிரவாதி காஷ்மீரில் கைது! இந்திய இராணுவம் அதிரடி!

08 May 2020 அரசியல்
indianarmy1.jpg

காஷ்மீரில் தற்பொழுது இராணுவம் நடத்திய அதிரடி வேட்டையில், தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே ஜம்மூ மற்றும் காஷ்மீர் பகுதியில், தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக இந்திய இராணுவத்திற்கு ரகசியத் தகவல்கள் கிடைத்தன. இந்தத் தகவலைத் தொடர்ந்து, இந்திய இராணுவத்தினரும், சிஆர்பிஎப் படை வீரர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இவர்கள் தேடுவதை அறிந்த தீவிரவாதிகள், இராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர். அதில், நான்கு இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டினை நடத்திய தீவிரவாதிகள் தப்பிச் சென்றனர். இதனால், காஷ்மீர் மாநிலம் முழுவதும் இந்திய இராணுவம், தன்னுடையக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஒவ்வொரு மாவட்டமாக அலச ஆரம்பித்தது.

அதில், சுமார் எட்டுத் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பின் தீவிரவாத இயக்கத் தளபதியாக இருந்து வந்த, ரியாஸ் நைக்கூ இந்திய இராணுவத்தினரால் சுட்டுத் தள்ளப்பட்டார். அவருக்கு ஏற்கனவே, 16 லட்ச ரூபாயினை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற அதிரடி சோதனையில், புதிய தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் டூடா மாவட்டதில், இராணுவத்தினர் நடத்திய சோதனையில் தன்வீர் அஹமத் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டார். அவர் மீது, 120 பி, 122, 7/25 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார். அதே போல், ரஹீப் அலாம் என்ற 22 வயது தீவிரவாதியினையும் இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

ரஹீப் அலாம் என்பவர் போலீஸ் வேலைக்குத் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தன் கையில், ஒரு துப்பாக்கியும் வாக்கிடாக்கியினையும் தீவிரவாதிகள் கொடுத்தனர் என, அவர் கூறியுள்ளார். இது குறித்து, இராணுவத்தினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

HOT NEWS