சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல்! 40 பேர் பலி! பலர் படுகாயம்!

23 January 2020 அரசியல்
syrianarmy.jpg

சிரியாவின் இத்திலீப் மாகாணத்தில் உள்ள சமாகா மற்றும் ஹவாய்ன் பகுதிகளில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் 40 இராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் பலரும் படுகாயம் அடைந்தனர்.

சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல், உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது. அதில், ஐஎஸ் தீவிரவாதிகள் புகுந்து கலவரத்தினை தூண்டி வந்தன. தொடர்ந்து, ஐஎஸ் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த குர்தீஸ் படைகளுக்கு அமெரிக்காவும், சிரியாவின் இராணுவத்திற்கு ரஷ்யாவும் ஆதரவு அளித்தனர்.

அவர்களுடைய இந்த ஆதரவின் காரணமாக, ஐஎஸ் தீவிரவாதிகள் விரட்டி அடிக்கப்பட்டனர். இந்நிலையில், குர்த் படைகளுக்கு அளித்து வந்த ஆதரவினை அமெரிக்கா விலக்கிக் கொள்வதாக, அதிபர் டிரம்ப் தெரிவித்த்தார். இதனையடுத்து, குர்த் படைகளின் மீது, சிரியா தாக்குதல் நடத்த முடிவு செய்தது. இந்நிலையில், தற்பொழுது சிரியாவில் உள்ள கலகக்காரர்கள், இத்திலீப் மாகாணத்தில் உள்ள சமாகா மற்றும் ஹவாய்ன் பகுதிகளில் செயல்பட்டு வந்த இராணுவ முகாம்களின் மீது, தாக்குதல் நடத்தினர்.

கிட்டத்தட்ட 500 பேர் வரை இந்தத் தாக்குதலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த தாக்குதலில், சிரியாவின் 40 இராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவ்வளவு பெரிய தாக்குதல் நடைபெற்று இருந்தாலும், இதுவரை எந்த அமைப்பும் இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.

HOT NEWS