புல்வாமா தாக்குதலுக்கு தேவையான பொருட்கள் அமேசானில் வாங்கப்பட்டுள்ளன!

07 March 2020 அரசியல்
pulwamattack.jpg

புல்வாமா தாக்குதலுக்கான பொருட்களை, அமேசானில் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில், சுமார் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், அந்த தாக்குதலுக்குக் காரணமாக இருந்தவர்களை, தேசியப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.

கடந்த ஐந்து வாரங்களில் தேசியப் புலனாய்வுத் துறையின் மூலம், பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில், ஸ்ரீநகரினைச் சேர்ந்த 19வயதுடைய வைஸ்-உல்-இஸ்லாம் மற்றும் 32 வயதுடைய மொஹம்மத் அப்பாஸ் ராத்தர் என்பவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் புலனாய்வுத் துறை விசாரணை மேற்கொண்டது.

அதில், ராத்தர் அமேசானில் இருந்து, வெடிக்கும் தன்மையுடைய ரசாயனப் பொருட்களை வாங்கியிருக்கின்றார். அவர், ஜேஈஎம் அமைப்பிற்கு எடுபிடி வேலைப் பார்த்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், மற்றத் தீவிரவாதிகள் தங்குவதற்கு, ராத்தர் அனைத்து வசதிகளையும் செய்துக் கொடுத்துள்ளார். இந்தத் தாக்குதலில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டு இருப்பது நிரூபணமாகி உள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து, தேசியப் புலனாய்வுத் துறையான என்ஐஏ தீவிர விசாரணை செய்து வருகின்றது.

HOT NEWS