நீண்ட நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு, மொசாம்பிக் துறைமுகத்தினை தீவிரவாதிகள் மீண்டும் கைப்பற்றி உள்ளனர்.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் தீவிரவாத அச்சுறுத்தலானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அங்குள்ள மொசாம்பிக் நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள தீவிரவாதிகள், ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதரவுடன் அங்குப் பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு 450 கோடி ரூபாய் மதிப்புள்ள எரிவாயு நிரப்பும் நிறுவனம் உள்ளது.
அங்குள்ள எரிவாயுவினை, அருகில் உள்ள மொசிம்போ டா பிரையா என்ற துறைமுகத்தின் மூலமே மற்ற இடங்களுக்கு மாற்ற இயலும். அந்த துறைமுகமானது, அந்த நாட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அதனைத் தன்னுடையக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு, தீவிரவாதிகள் கடுமையாக சண்டையிட்டு வந்தனர்.
தற்பொழுது அந்த துறைமுகத்தினை தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். அங்கு தொடர்ந்து போராடி வந்த இராணுவ வீரர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். மீதமிருந்த வீரர்கள் படகுகள் மூலம் தப்பிச் சென்று உள்ளனர். இதனால், அந்த நாட்டில் தற்பொழுது தீவிரவாதிகளின் கை ஓங்கியிருக்கின்றது.