தீவிரவாத தலைவர்களை கைது செய்த பாகிஸ்தான் அரசு!

11 October 2019 அரசியல்
taliban.jpg

பாகிஸ்தான் அரசாங்கம், அதிரடியாக, 4 தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களை கைது செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து, பாகிஸ்தான் மீது எழுந்து வந்த தீவிரவாத புகார்களின் காரணமாக, பாகிஸ்தான் நாட்டினை கிரே கலரில் வைத்துள்ளது எப்ஆட்எப் (FATF) அமைப்பு. இதனால், பாகிஸ்தான் தற்பொழுது, அந்நாட்டிலுள்ள தீவிரவாத அமைப்புகளை முற்றிலுமாக, கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. அங்குள்ள தீவிரவாதிகளையும் கைது செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரே பட்டியலில் பாகிஸ்தான் இருப்பதால், அந்நாட்டினை FATF அமைப்பு கண்காணிக்கத் தொடங்கி விட்டதால், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தலைவர்களான முகம்மது அஷ்ரப், ஜாபர் இக்பால், அப்துல் சலாம் மற்றும் யாஹயா அசீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரே நிறப் பட்டியலில் உள்ள பாகிஸ்தான், கருப்பு நிறப் பட்டியலுக்குச் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதால், இந்த செயலில் இறங்கியுள்ளது. இதன் காரணமாக, FATF அமைப்பின், பொருளாதார தடை போன்ற, தண்டனைகளில் இருந்து தப்பிக்க முடியும் என நம்புகின்றது. மேலும், கருப்பு நிறப்பட்டியலுக்குச் சென்றுவிட்டால் கண்டிப்பாக, பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுவிடும். எனவே, இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

HOT NEWS