காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை! தேடும் பணி தீவிரம்!

29 September 2019 அரசியல்
indiansoldiers.jpg

காஷ்மீரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை, இந்திய இராணுவ வீரர்கள் அதிரடியாக சுட்டதில் மூன்று தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து, ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் இந்திய இராணுவத்தினர் தீவிர சோதனைகள் மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, தீவிரவாதிகள் ஒரு சிலர் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள, ரம்பான் மாவட்டத்தின், படோட் என்ற பகுதியில் பதுங்கியிருப்பதாக, தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், ரிசர்வ் போலீசார் மற்றும் காவல் துறையினர், தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது, பாதுகாப்புப் படை நெருங்குவதை உணர்ந்த தீவிரவாதிகள், அங்கிருந்த ஒருவரை பிடித்துக் கொண்டு, அருகில் உள்ள வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

இந்திய இராணுவம் பேசிப் பார்த்தும் அவர்கள், அந்தப் பிணையக் கைதியை விடாததால், துப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பித்தனர். தொடர்ந்து, வீரர்களின் தாக்குதலை சமாளிக்க முடியால், ஒருவர் பின் ஒருவராக, மூன்று பேரும் உயிரிழந்தனர். அந்தத்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் பொழுது, தீவிரவாதிகள் சுட்டதில், ஒரு இராணுவ வீரர் உயிரிழந்தார். இரண்டு பேர் காயமடைந்தனர்.

காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து, இந்திய இராணுவத்தினர் மைக்குகளில், தீவிரவாதிகள் இங்கு இருந்தால், சரணடைந்து விடுங்கள் எனக் கூறி வருகின்றனர்.

HOT NEWS