ஆசிரியர் தகுதித் தேர்வில் 1% பேர் மட்டுமே தேர்ச்சி!

21 August 2019 அரசியல்
tet.jpg

ஆசிரியர்களுக்கு வைக்கப்பட்ட தகுதித் தேர்வில் வெறும் 1% ஆசிரியர்களேத் தேர்ச்சிப் பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு எனும் டெட் தேர்வு நடத்தக் கூடாது என வழக்கு நிலுவையில் இருந்ததால், தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு காலத் தாமதம் இன்றி, தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என சிலர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, அரசாங்கம் டெட் தேர்வினை நடத்தியது. மொத்தம் ஒரு லட்சத்து அறுபத்து இரண்டாயிரத்து 314 பேர் தேர்வு எழுதினர். இதில் இரண்டாயித்து 312 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மற்ற ஒரு லட்சத்து அறுபதாயிரத்து இரண்டு பேர் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.

இதனை தேர்வுத் துறை மட்டுமல்ல, தேர்வு எழுதிய ஆசிரியர்களே எதிர்ப்பார்க்கவில்லை. முதல் தாளிற்கானத் தேர்வில் பலரும் தேர்வு எண்களை குறிப்பிடவில்லை. பலர் பதில்களை சரியாகக் குறிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS