தல அஜித் குமார் நடித்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை! இத்திரைப்படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின், கணவர் திரு போனி கபூர் தயாரித்து இருந்தார். இதில் அஜித் குமார் வழக்கறிஞராக நடித்திருந்தார். இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கி இருந்தார்.
இந்நிலையில், தன்னுடைய 60வது படத்தினையும், ஹெச் வினோத் இயக்க வாய்ப்பு அளித்துள்ளார் அஜித் குமார். நேர்கொண்ட பார்வைக்குப் பின், சிறிது இடைவேளை எடுத்துக் கொண்ட அஜித், துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொண்டார். இந்நிலையில், இன்று தல 60 படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.
இந்த பூஜையின் படங்கள், தற்பொழுது வெளியாகி உள்ளன. இதில், தயாரிப்பாளர் போனி கபூர் கையில், க்ளாப் போர்டுடன் இருக்கின்றார். அந்தக் கிளாப் போர்டில் ஏகே60 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தினையும் பே வீவ்யூ ப்ராஜெக்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது.
இந்தப் படத்தினையும், ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் ஒட்டு மொத்தமாக, சேட்டிலைட் உரிமைகள், டிஜிட்டல் உரிமைகள் ஆகியவற்றை வாங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.