தன்னுடைய மகள் மீது அளவற்ற பாசம் வைத்துள்ள நடிகர் தல அஜித். இது நம் அனைவருக்குமே தெரியும். கார் ரேசரான தல அஜித், தன் மகளுக்காக, பள்ளிக் கூடத்தில் நடைபெற்ற, சைக்கிள் டயர் ஓட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பள்ளிகளுக்குச் செல்லுதல் உட்பட, தன் குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாகவும், நடந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில், விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் குமார் தந்தையாக நடித்திருந்தார். அதனைப் பார்த்த பாராட்டிய அஜித் குமாரின் மகள் அனோஷ்கா, இனி பெண்களைக் கிண்டல் செய்யும் படங்களில், நடிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளாராம்.
இதற்கு அஜித் குமாரும் சம்மதம் தெரிவித்து விட்டாராம். மேலும், பெண்களைக் கிண்டல் செய்யும் படங்களில் இனி நடிப்பதில்லை எனவும் கூறிவிட்டாராம். விஸ்வாசம் படத்தில் இருந்து, அஜித்குமாருக்கு பெண் ரசிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பத்து வருடங்களுக்கு முன், காதல் மன்னனாக அஜித் குமார் இருந்தார். அப்பொழுது அவருக்கு இருந்த பெண் ரசிகைகளின் எண்ணிக்கை பின்னர், படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. தற்பொழுது, அது மீண்டும் கூடத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.