சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 படத்தின், முக்கியத் தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளன.
தற்பொழுது ரஜினிகாந்த், தர்பார் படத்தின் புரோமோஷன் பணிகளில் உள்ளார். இந்நிலையில், தன்னுடைய அடுத்தப் படமான தலைவர் 168 படத்தில் நடிப்பதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். குடும்பக் கதையாக உருவாக உள்ள இந்தத் திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷ், நேற்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
இந்தப் படத்தில் மேலும், நடிகை மீனா மற்றும் நடிகை குஷ்பு ஆகியோரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். இதனை, இப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ், ரஜினிகாந்திற்கு மகளாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே போல், நடிகை மீனாவும், குஷ்புவும் ஜோடியாக நடிப்பார்களா என்ற கேள்வியும் நிலவி வருகின்றது. ஏற்கனவே, குஷ்புவும், மீனாவும் ஏற்கனவே ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.