சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும், தலைவர் 168வது படத்தின் பெயரானது, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் படமானது, தற்பொழுது விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் படத்தின் பெயரானது, அண்ணாத்த என ஏற்கனவே இணையத்தில் லீக்காகி இருந்தது. இந்நிலையில், நேற்று இந்தப் படத்தின் பெயரினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது சன்பிக்சர்ஸ். இந்தப் படத்திற்கு அண்ணாத்த எனப் பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தில், நடிகர் சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு, டி இமான் இசையமைக்கின்றார்.