விஜய் நடிக்கும் 64வது திரைப்படத்தில் நடிப்பதற்காக, நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி உள்ளார்.
தற்பொழுது பிகில் படத்தினை முடித்த கையோடு, விடுமுறைக்காக, வெளிநாடு சென்று திரும்பினார் நடிகர் விஜய். அவர் தற்பொழுது தளபதி 64 என்ற படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தினை இயக்குநர் லோகேஸ் இயக்குகின்றார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கின்றார்.
இந்நிலையில், விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக, நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வந்தது. இருப்பினும், விஜய் சேதுபதி சம்பள விஷயம் காரணமாக, முடிவு எட்டப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
தற்பொழுது, நடிகர் விஜய் நடிக்கும் 64வது படத்தின், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில், நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இருப்பினும், அவர் எந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது பற்றி இன்னும் வெளியிடப்படவில்லை. இதனை விஜயின் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.