தளபதி 64 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. படத்தில் நடிக்கும் முக்கியப் பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.
தளபதி விஜய் நடிப்பில் தயாராகி உள்ள பிகில் திரைப்படம், வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 64 பற்றிய அறிவிப்பு வெளியானது.
அத்திரைப்படத்தில், தற்பொழுது பல பிரபலங்களும் இணைந்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சாந்தனு மற்றும் நடிகை மாளவிகா உட்பட பலரும், இதில் இணைந்துள்ளனர். தினம் ஒரு அப்டேட்டினை, படத்தின் தயாரிப்பு நிறுவனமான, எக்ஸ்பி பிலிம் க்ரியேஷன்ஸ் வெளியிட்டு வருகின்றது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கின்றார். இவரும், விஜய்யும் இணையும் இரண்டாவது திரைப்படம் ஆகும். இதற்கு முன், இவர்கள் இருவரும் இணைந்த கத்தி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆனது.
இன்று, காலையில், படத்தின் பூஜை நடத்தப்பட்டது. அதில், நடிகர் விஜய்யுடன், விஜய் சேதுபதி, மாளவிகா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.