தற்பொழுது பிகில் படம் வெளியாகி ரசிகர் மத்தியில், நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. இந்நிலையில், தன்னுடைய அடுத்தப் படமான தளபதி 64 படத்தில் மிகவும் பிசியாக உள்ளார் விஜய்.
டெல்லியில் தற்பொழுது, இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இப்படத்தில், நடிக்க நடிகர் விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்டனி வர்கிஸ், மாளவிகா மோகனன் உட்பட பலப் பிரபங்கள் இணைந்துள்ளனர்.
நண்பன் திரைப்படத்திற்கு பிறகு, விஜயுடன் இவ்வளவு நடிகர்கள் இணைவது இதுவே முதல் முறை. இணைந்துள்ள நடிகர்கள் அனைவருமே மிகப் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்பொழுது பிரபல டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளரான ரம்யா சுப்ரமணியனும் இப்படத்தில் இணைந்துள்ளார். இது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கின்றார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தினை இயக்குகின்றார். ஸ்டன்ட் சில்வா இப்படத்திற்கு சண்டைக் காட்சிகளை அமைக்கின்றார். இப்படத்தின் சூட்டிங்கானது, டெல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.