தளபதி விஜய் நடிக்கும் 64வது படத்தின் சூட்டிங்கானது, டெல்லியில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், படத்தின் சூட்டிங் ஸ்டில்கள் பல இணையத்தில் கசிந்துள்ளன.
தளபதி விஜய் நடிகும் 64வது படத்தினை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகின்றார். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு, இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கின்றார். இப்படத்தின் சூட்டிங் தற்பொழுது, டெல்லியில் நடைபெற்று வருகின்றது. இதில், நடிகர் விஜய் கலந்து கொண்டுள்ளார்.
சுமார் 40 நாட்கள், இங்கு சூட்டிங் எடுக்க திட்டமிடப்பட்டது. அதற்கான, பணிகளும் வெகு ஜோராக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் நிலவி வரும் காற்று மாசினால், சூட்டிங் எடுப்பதில் சிக்கல் உள்ளது. தொடர்ந்து புகைமூட்டமாக டெல்லி உள்ளதால், அங்கு தேவையான வெளிச்சம் கிடைப்பதிலும் சிக்கல் நிலவி வருகின்றது. அது மட்டுமின்றி, மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால், அங்கு எடுக்கப்படும் காட்சிகளை முடிக்க மேலும் பல நாட்கள் ஆகலாம் எனத் தெரிகின்றது. இதனால், அதற்கும் சேர்த்து செட் போட்டு படமாக்கப்படலாம் என கூறப்படுகின்றது.
இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகவில்லை. தமிழகத்தில் விஜயின் சூட்டிங் நடைபெற்றால், அவரைக் காண ஒரு பட்டாளமே சென்று, சூட்டிங் நடைபெறும் இடத்தினை முற்றுகையிடுகிறது. இதனால், போலீசாரின் தடியடி உட்பட பல சிக்கல்கள் நிலவி வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு தான், படத்தின் சூட்டிங்கினை டெல்லியில் வைக்கத் திட்டமிட்டது படக் குழு. ஆனால், அங்கும் தற்பொழுது பிரச்சனையானது, காற்றின் மூலம் ஏற்பட்டுள்ளது.