இன்னும் பிகில் படத்தின் அப்டேட் வரவில்லையே என, விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் குமுறிக் கொண்டு இருக்கையில், தளபதி 64 படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கின்றன.
தளபதி 64 திரைப்பட சூட்டிங்கில், தற்பொழுது நடிகர் விஜய் முழுவீச்சில் இறங்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர் மற்றும் நடிகையர்களின் தேர்வும் ஒரு பக்கம் நடைபெற்று வருகின்றது. நடிகர் சாந்தனு, வர்க்கீஸ் பெப்பே, விஜய் சேதுபதி உட்பட பலர் நடிக்கின்றனர்.
பிக்பாஸ்3 போட்டியின் வெற்றியாளரான, முகின் ராவ்விடம் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கின்றார்.
இந்நிலையில், இப்படத்தின் சேட்டிலைட் உரிமைப் பற்றிய தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்தத் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது. இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை, சுமார் 35 கோடிக்கு வாங்கியுள்ளது சன் டிவி. இது குறித்து, சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இருப்பினும், சன் டிவி தரப்பில் இருந்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.