தம்பி திரைவிமர்சனம்!

21 December 2019 சினிமா
thambimovie.jpg

நடிகர் கார்த்தியின் படங்களை, குடும்பங்களாக எப்பொழுதும் சென்றுப் பார்க்க இயலும். இந்தப் படமும் அந்த வரிசையில் தான் உள்ளது. முதன் முறையாக, தன்னுடைய அன்னி ஜோதிகாவுடன் இணைந்து நடித்திருக்கின்றார் நடிகர் கார்த்தி.

பாபநாசம் படத்தினை இயக்கிய ஜீத்தூ ஜோசப் இயக்கி உள்ளார். தமிழில் இவருக்கு இது, இரண்டாவது படம். இந்தப் படமும் த்ரில்லர் படம் தான். ஆனால், அமைதியானத் த்ரில்லர் படம். மிக மெதுவாக சென்றாலும், நம்மை ரசிக்க வைக்கும் அளவிற்கு சரியானப் படம் தான்.

15 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன சரவணன், மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு வருகின்றான். அவனை மதிக்காமல் உதாசீனப்படுத்துகின்றார் ஜோதிகா. சரவணனின் சிறு வயது நண்பனுக்கும், பாட்டி சௌகார் ஜானகிக்கும் இவன் உண்மையான சரவணனா, என்ற சந்தேகம் வருகின்றது. இதனைத் தொடர்ந்து, சரவணனாக வந்திருக்கும் கார்த்தியை கொல்ல சதி நடக்கின்றது.

உண்மையில், சரவணனாக வந்திருக்கும் கார்த்தி யார், அவரை அனுப்பியது யார், கொல்ல முயன்றது யார் என, படம் நன்றாக செல்கின்றது. ஒரு இடம் கூட நம்மை படத்தினை விட்டு வெளியில் யோசிக்கவிடாமல் செய்வதில், படத்தின் திரைக்கதை நம்மை வெற்றிப் பெறுகின்றது. ஜோதிகா என்றாலே நடிப்புத் தான். இந்தப் படத்திலும், அவருடைய நடிப்பு மிக அழகாக வெளிப்பட்டுள்ளது.

சத்யராஜ்ஜினைப் பற்றி இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். படத்தில் தன்னுடையத் தனிப்பட்ட நடிப்பினை காட்டி, அனைத்து நடிகர் நடிகைகளையும் தூக்கி சாப்பிட்டு விட்டார் என்றேக் கூற வேண்டும். அந்த அளவிற்கு மனிதர் பின்னி எடுத்துள்ளார். சௌகார் ஜானகி அமைதியான நடிப்பின் மூலம் நம்மை கவர்கின்றார். இந்தப் படத்திற்கு, திரையறங்குகள் குறைவாகவே கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திரையறங்குகளின் எண்ணிக்கை கூடினால், இந்தப் படம் பெரிய வெற்றியினைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

மொத்தத்தில் தம்பி திரையறங்குகளை நம்பி.

ரேட்டிங் 3.5/5

HOT NEWS