தஞ்சை பெரிய கோயிலில், வரும் பிப்ரவரி 5ம் தேதி அன்று, குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதனையடுத்து, அங்கு தமிழில் தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்று, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதற்கு விளக்கமளித்த நீதிமன்றம், ஆகம விதிப்படி சமஸ்க்ருத மொழியிலும், சிவனடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழிலும் குடமுழுக்க நடத்தப்படும் என கூறப்பட்டது. இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறையின் விளக்கத்தினை பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.
ஆனால், தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என, மனு சமர்பிக்கப்பட்டது. ஆனால், இந்த மனுவினை விசாரித்த நீதிமன்றம், ஆகம விதிப்படியே நடக்க உள்ளது என்பதால், இந்த மனுவினை தள்ளுபடி செய்தது.
இதனால், தமிழ் மற்றும் சமஸ்க்ருத மொழிகளில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி அன்று, யாகங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.