தற்பொழுது இந்தியாவில் இயங்கி வரும் தனியார் வங்கிகளில் ஒன்றான எஸ் பேங்க் ஆனது, கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் பிரச்சனையால் நிலைக் குலைந்துள்ளது. இந்த விஷயம் தற்பொழுது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இனி அந்த நிறுவனத்தினால், எவ்வித சட்ட செயல்களிலும் அதிகாரப்பூர்வமாக ஈடுபட முடியாது.
இதனை முன்னிட்டு, வாடிக்கையாளர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். அவர்களுக்கு, பல கட்டுப்பாடுகளை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா விதித்துள்ளது. மேலும், அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், இனி 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க இயலும் என கடுமையான விதியினை கூறியுள்ளது. இது குறித்து நக்கலாக, தன்னுடையக் கருத்தினை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், மோடியின் தவறானப் பொருளாதாரக் கொள்கையினால், இந்தியாவின் பொருளாதாரம் நிலைக் குலைந்துவிட்டது. இனி அந்த வங்கியானது எஸ் பேங்க் அல்ல, நோ பேங்க் என கிண்டல் செய்துள்ளார். இது தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.