ஆங்கிரி பேட் திரைப்படம் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, ஆங்கிரி பேட் படத்தின் இரண்டாம் பாகம் தற்பொழுது வெளியாகி உள்ளது. 2016ல் வெளிவந்து அனைவரது பாராட்டையும், வரவேற்பையும் பெற்ற ஆங்கிரி பேட்ஸ்ஸை நம்பியே இந்தத் திரைப்படத்தை உருவாக்கி உள்ளனர். அதுவும் நன்றாகவே கைக் கொடுத்துள்ளது.
இந்தப் படம் வெளியாவதற்கு முன், ஆங்கிரி பேட் 2 கேமினை ஆப்டேட் செய்தது, அதன் உரிமையாளரான ரோவியோ. ஆங்கிரி பேட் திரைப்படத்தில், பன்றிக் கூட்டத்திற்கும், பறவைக் கூட்டத்திற்கும் இடையேப் பிரச்சனை நடக்கும், அதில் பறவைக் கூட்டம் வென்று தன்னுடையத் தீவினைப் பாதுகாக்கும். பன்றிக் கூட்டம் தன்னுடைய தீவிற்கே சென்று விடும்.
இதன் தொடர்ச்சியாகவே, அதன் இரண்டாம் பாகம் வெளி வந்துள்ளது. இவர்களுக்குத் தெரியாமல் மூன்றாவது தீவு ஒன்று உள்ளது. அங்கு உள்ள பனிப் பறவையிடம் இருந்து தப்பிக்க, வேறு வழியில்லாமல், பன்றிக் கூட்டமும், பறவைகள் கூட்டமும் ஒன்று சேர்கின்றன. அவை வென்றனவா? அல்லது இல்லையா என்பதனை மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் திரைப்படமாக்கி உள்ளனர்.
இப்படத்தில் குறைகூறுவதற்கு என்று எதுவுமில்லை. அனைவரும் ரசிக்கும் விதத்திலேயே இருக்கின்றது. குறிப்பாக, குழந்தைகள் இந்தப் படத்தினைப் பார்த்தால், கண்டிப்பாக கொண்டாடுவார்கள். எது எவ்வாறு இருப்பினும், முதல் படத்தில் இருந்த எதிர்ப்பார்ப்பு, இந்தப் படத்தில் சற்றுக் குறைவாகவே உள்ளது என்பது மட்டுமே வருத்தம் அளிக்கக் கூடிய விஷயம் ஆகும்.
ஆங்கிரி பேட்2-ஆங்கிரி பிக்