லயன் கிங் திரைவிமர்சனம் படம் எப்படி இருக்கு?

18 July 2019 சினிமா
thelionking.jpg

ஒரு ஜாலியானா, சந்தோஷமான படத்திற்குப் போகலாமா? முதலில் நாம் தமிழ் டப்பிங் கலைஞர்களை பாராட்ட வேண்டும். ஏனெனில், இவர்களுடைய டப்பிங்கைக் கேட்டு நீங்கள் சிரிக்காவிட்டால், ரசிக்காவிட்டால் பார்ப்போம். அந்த அளவிற்கு மிக சிறப்பாக டப்பிங் செய்துள்ளனர்.

படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் எது, உண்மைக் காட்சி எது, என யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, சிறப்பான கிராபிக்ஸ் காட்சிகளை கொண்டுள்ளது.

டிமூன் அண்ட் பும்பாவைப் பற்றி நமக்குத் தெரியும். பும்பாவுக்கு ரோபோ ஷங்கர், சாசு மரங்கொத்திக்கு மனோபாலா, டிமூனுக்கு குரல் கொடுத்திருக்கும் சிங்கம் புலி, ஸ்காட்ச்சருக்கு அரவிந்த் சாமி, சிம்பாவுக்கு சித்தார்த் குரல் என, தமிழ் டப்பிங் குழுவானது, தமிழ் திரைக்குழு என்றேக் கூறலாம்.

படத்தின் கதை அனைவருக்கும் தெரியும். வில்லனான ஸ்காட்ச்சர் சிம்பாவுக்கு சித்தப்பா. சிம்பாவின் அப்பா முஃபாசா. முஃபாசா ஒரு நாள் இறக்கிறார். அவருடைய சித்தப்பாவின் சூழ்ச்சியால் இறந்த முஃபாசாவை பார்க்கும் சிம்பா, அந்தக் காட்டை விட்டு ஓடுகிறான். அந்தக் காட்டை சித்தப்பா சிங்கமான ஸ்காட்ச்சர் அரசாள்கிறான். சிங்கமான சிம்பா எப்படி, டிமூன் மற்றும் பும்பாவுடன் இணைந்து, அந்த காட்டை மீட்கிறான். தன் அத்தை மகளான நாலா எனும் பெண் சிங்கத்துடன் செய்யும் சாகசம் நிறைந்த படமே சிம்பா.

படத்தின் கதை ஒன்றும் பெரிய அளவில் புதியது அல்ல. ஏற்கனவே, பல ஆண்டுகளாக டிவியில் ஓடும் லயன் கிங் கார்டூனின் திரைப்படவடிவமே, தி லயன் கிங். ஒரு படம் வெற்றியடைய, செண்டிமென்ட், மகிழ்ச்சி, கண்ணீர், வீரம், காமெடி என எவையெல்லாம் வேண்டுமோ, அவையெல்லாம் இப்படத்தில் உள்ளது.

தமிழ் சினிமாவின் இந்த வார உண்மையான வெற்றியாளர் தி லயன் கிங் தான்.

ரேட்டிங் 4.2/5

HOT NEWS