உலகிலேயே முதல் முறையாக, ஒரு படம் எடுக்கப்பட்டு 100 ஆண்டுகள் கழித்து ஒரு படம் வெளியாக உள்ளது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?
முற்றிலும் வித்தியாசமனா கதைக் களத்துடன், எதிர்காலத்தில் அதாவது 2115ம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும், மனிதர்கள் எவ்வாறு வாழ்வார்கள் என்பது பற்றி ஆய்வு செய்து ஒரு படத்தினை உருவாக்கி உள்ளனர். இதனை எழுதியவர் ஜான் மால்க்விச் என்பவர் ஆவார். இந்தப் படத்தினை ராபர்ட் ரோட்ரிகஸ் என்பவர், இயக்கி உள்ளார்.
இந்தப் படத்தின் ரீல் பெட்டியானது, தயாராக உள்ளது. இந்தப் படத்தில் ஜான் மால்க்விச் நடித்துள்ளார். அவருடன் சூயா சாங், மார்க்கோ ஜாரோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்பொழுது தற்காலிகமாக இந்தப் படத்திற்கு தி மூவி யூ வில் எவர் சீ எனப் பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தின் ரீல் பெட்டியானது, ஒரு பாதுகாப்பான லாக்கரில் வைக்கப்பட்டு உள்ளது.
அந்த லாக்கரானது, மிகவும் அதிக பாதுகாப்புடன் உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் இந்த ரீல் பெட்டி உள்ளது. ஒருவேளை யாராவது, இந்த லாக்கரை உடைத்து, ரீல் பெட்டியினை வெளியில் எடுக்க நினைத்தால், அதனுள் உள்ள ரீல் பெட்டியானது கடுமையாகப் பாதிக்கப்பட்டு விடும். அந்த லாக்கரில் டைமர் செட் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, வருகின்ற 2115ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி தான், இந்த லாக்கர் திறக்கும்.
இந்தப் படத்தினைக் கொண்டாடும் விதத்தில், அதனுடன் லூயிஸ் 13 கோக்னாக் என்ற பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட விஸ்க்கி வைக்கப்பட்டு உள்ளது. 2115ம் ஆண்டு இந்த லாக்கர் திறக்கப்பட்டவுடன், இந்த விஸ்க்கியும் கைக்கு கிடைக்கும்.