விரைவில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட்! அமைச்சர் அதிரடி!

02 September 2019 அரசியல்
kadamburraju.jpg

இனி ஆன்லைனில் மட்டுமே, சினிமாவிற்கு டிக்கெட் எடுக்க முடியும் என செய்திகள் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், திரு. கடம்பூர் ராஜூ பேட்டியளித்தார்.

அப்பொழுது பேசிய அவர், திரையறங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தினை, தற்பொழுது தரக்க்கட்டுப்பாட்டுக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். திரையறங்குளின் கட்டணங்களை ஒழுங்குபடுத்தியுள்ளோம். பார்க்கிங் கட்டணமும் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில், அனைத்துத் திரையறங்குளின் டிக்கெட்டுகளும் ஆன்லைனில் மட்டுமே எடுக்கும் வகையில், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான கட்டணமும் விரைவில் நிர்ணயிக்கப்படும் என அறிவித்தார்.

இதற்கு திரைத்துறையினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆன்லைனில் டிக்கெட் விற்கப்படும் பொழுது, ஜிஎஸ்டி விதிக்கப்படலாம். அது அரசாங்கத்திற்கும் லாபம் தான். ஆனால், பார்வையாளர்களின் நிலை தான் வருத்தமான ஒன்று. அதுமட்டுமின்றி ஆன்லைனில் பல்க்காக டிக்கெட் புக்கிங் செய்பவர்களும் உண்டு. ஒரு வேளை ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்க்கப்பட்டால், கண்டிப்பாக, ஒரு நபருக்கு அதிகபட்ச டிக்கெட் இவ்வளவு மட்டும் தான் என்பதை வரையறை செய்ய வேண்டும். அப்பொழுது மட்டுமே, டிக்கெட்டினை திருட்டுத்தனமாக பிளாக்கில் விற்க்கப்படுவது தவிர்க்கப்படும்.

HOT NEWS