தமிழகத்தில் தியேட்டர்கள் மூடல்! புதிய படங்களுக்குச் சிக்கல்!

18 March 2020 அரசியல்
theatre.jpg

தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதனால், புதிதாக வெளியாகி உள்ள படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸானது, தற்பொழுது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. தற்பொழுது வரை, 137 பேர் இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களாக, இந்தியாவில் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இந்த நோய் தாக்கி மூன்று பேர் இந்தியாவில் மரணமடைந்துள்ளனர்.

இதனால், தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த வைரஸ் பரவாமல் இருக்க, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகின்ற 31ம் தேதி வரை, விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஹாஸ்டல்களில் தங்கிப் படித்து வந்த மாணவ மற்றும் மாணவிகள் வீடுகளுக்குத் திரும்பினர்.

தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கைகளை சுத்தப்படுத்த ஹேண்ட் வாஸ் வழங்கப்படுகின்றது. அவர்கள் மட்டும், பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வணிக வளாகங்கள், மால்கள் உள்ளிட்ட இடங்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டு உள்ளன. கோயில்கள் பலவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளன. இதனால், நேற்று முதல் கோயில்களில் கூட்டங்கள் இல்லாமல் உள்ளன. இதனிடையே, தமிழகத்தில் உள்ள 960 திரையறங்குகளும் மூடப்பட்டு உள்ளன.

இதனால், தற்பொழுது திரையிடப்பட்டுள்ள, வால்டர் மற்றும் தாராள பிரபு திரைப்படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே, இப்படங்கள் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி உள்ள நிலையில், திரையறங்குகளும் மூடப்பட்டு உள்ளதால், இப்படங்கள் தோல்வியினைத் தழுவும் வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன. இவை மட்டுமின்றி, உலகளவில் பிரசித்திப் பெற்ற ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம் வெளியாகும் தேதியானது, ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் திரையறங்கிற்கு அதிகமாக வருவார்கள் என்பதால், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து அரசாங்கங்களும் எடுத்து வருகின்றன.

HOT NEWS