மே மாதம் வரை திரையறங்குகளை மூட, பல நாடுகள் முடிவு செய்துள்ளன. இதனால், ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையின் அடுத்தப் பாகமான, நோ டைம் டூ டை படத்தின் ரிலீஸானது, செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்தாலும், மிகக் குறுகியக் காலக் கட்டத்தில் இது உலகம் முழுக்கப் பரவிவிட்டது. தற்பொழுது இந்த வைரஸால், சுமார் 5,00,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை, இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், சீனாவினை இத்தாலி, ஸ்பெயின் ஆகியவை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இங்கு ஒரே வாரத்தில் 2,50,000 பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே, உலகின் மாபெரும் வல்லரசு நாடான அமெரிக்காவிலும், நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையானது 83,000 கடந்துள்ளது. உலகிலேயே அமெரிக்காவில் தான், இந்த நோய் தொற்றானது அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால், அமெரிக்கா நாடும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றது. மேலும், வேகமாக மருந்து கண்டுபிடிக்கவும் முயற்சித்து வருகின்றது. இந்த நோய் காரணமாக, உலகின் பல நாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள திரையறங்குகளை வருகின்ற மே இறுதி வரை மூடிவைக்க, உத்தரவிட்டுள்ளன.
இந்த உத்தரவின் காரணமாக, ரிலீஸிற்குத் தயாராக இருக்கின்ற படங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.