தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னரி ஆஃப் பக்கிர் என்ற பிரெஞ்ச் மொழி திரைப்படத்தின் தமிழ் பதிப்பே, பக்கிரி. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இந்தியராக நடித்துள்ளார். சர்வதேச விருதுகளை வென்ற இத்திரைப்படம், தற்பொழுது, தமிழில் வெளியாகி உள்ளது.
ஒரு ஜாலியான படம் பார்க்க ஆசைப்படுறவங்க, இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்கலாம். எந்தக் குறையும் இல்லை. மிக நேர்த்தியான கதை, திரைக்கதை மற்றும் படக் குழு என, இப்படம் வெற்றி பெறுவதற்குத் தேவையான, அனைத்துத் தகுதிகளையும் கொண்டுள்ளது.
பிரெஞ்சு ஆணுக்கும், இந்தியப் பெண்ணுக்கும் பிறந்த நபர் தனுஷ். தாய் இறக்கும் முன், தன்னுடைய தந்தை பிரெஞ்சுகாரர் எனத் தெரிந்து கொள்கிறார். பின்னர், அவருடையத் தந்தையைத் தேடி பிரான்ஸ் கிளம்புகிறார். அவர் அவருடையத் தந்தையை சந்தித்தாரா இல்லையா என்பது தான் படமே. இடையில், வரும் கதாப்பாத்திரங்கள், அவைகளின் முக்கியத்துவம் என படம் கச்சிதமாக நகர்கிறது. தனுஷ் காதலியாக வரும் எரின் மோரியார்டி, படம் முழுக்க நம்மை கவர்கிறார். அவரும் தனுஷூம் ஒன்று சேர்வார்களா, இல்லையா என்பது நம் மனதினை நெகிழ வைக்கிறது.
இது தனுஷின் ரசிகர்களுக்கானது மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு மக்களுமே ரசிக்கும் வகையிலேயே இப்படத்தினை உருவாக்கியுள்ளனர். அகதிகளின் பிரச்சனைகளைக் கூறும் பொழுது, நடிகர் தனுஷின் நடிப்பும் சரி, திரைக்கதை நகரும் விதமும் சரி, நம்மை பதற வைக்கிறது. மொத்தத்தில் பக்கிரி, போக்கிரி.