திருமழிசையில் மார்க்கெட் தொடங்கியது! பொதுமக்கள் நிம்மதி!

11 May 2020 அரசியல்
thirumalisai.jpg

சென்னையில் தற்பொழுது தற்காலிகமாக, திருமழிசையில் காய்கறி மார்க்கெட்டானது செயல்படத் தொடங்கியது.

சென்னையில் தற்பொழுது கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சப்படுகின்றனர். அந்த அளவிற்கு, இந்த வைரஸானது கடந்த வாரம் தொடங்கி, கடுமையாகப் பரவி வருகின்றது. இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது கோயம்பேடு காய்கறி சந்தை.

இந்த சந்தைக்கு வந்த பல ஆயிரம் பேர், தங்களுடைய வீட்டிற்குத் தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். மேலும் பலர், மொத்த விற்பனைக்காக காய்கறிகளை வாங்கிச் சென்றனர். அவ்வளவு தான், அன்று தொடங்கி, தற்பொழுது வரை சென்னையை கருஞ்சிவப்பு மண்டலமாக இந்த காய்கறி மண்டலம் மாற்றிவிட்டது. கொரோனாவே பரவாமல் இருந்து வந்த மாவட்டங்களிலும், இந்த வைரஸ் பரவக் காரணமாக அமைந்தது இந்த மார்க்கெட்.

இது குறித்து விசாரித்த மாநில அரசு, கோயம்பேடு சந்தைக்கு சீல் வைத்து மூடியது. அங்கு, சுகாதாரப் பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். கோயம்பேடு சந்தையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்களுக்கும் இந்த வைரஸ் பரவியது. அதுமட்டுமின்றி, அந்த சந்தையில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் இந்த வைரஸ் பரவியது. இதனைத் தொடர்ந்து, கோயம்பேடு சந்தையை மூன்றாகப் பிரித்து, அதனை திருமழிசைப் பகுதியில் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்கானப் பணிகள், மும்முரமாக நடைபெற்றன. அவைகள் நேற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று அதிகாலையில் அந்த சந்தையானது செயல்பாட்டிற்கு வந்தது. காய்கறி விற்பவர்கள், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், காய்கறிப் பிரச்சனைகள் முடிவிற்கு வரும் என தெரிய வந்துள்ளது.

HOT NEWS