திருநள்ளாறு கோயிலில் ஆன்லைன் மூலம் புக் செய்பவர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி!

20 December 2020 அரசியல்
thirunallaru.jpg

திருநள்ளாறு கோயிலில் கடவுளை தரிசிக்க, ஆன்லைன் மூலம் புக் செய்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என, கோயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

காரைக்கால் அருகில் உள்ள திருநள்ளாற்றில், தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், சனி பகவானுக்கு பெரிய அளவில் பிரசித்திப் பெற்றது. இந்தக் கோயிலுக்கு வாரந்தோறும் சனிக் கிழமை அன்று ஆயிரக் கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சி தோறும் லட்சக்கணக்கானப் பக்தர்களும் வருகை தருகின்றனர். இந்த ஆண்டு வருகின்ற 27ம் தேதி காலை 5.22 மணிக்கு, சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி, தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார். அதனால், இந்த ஆண்டு பல லட்சக்கணக்கான பக்தர்கள், கோயிலுக்கு வருகைத் தருவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்கள் வெளியேத் தேவையின்றி வரக் கூடாது என, அரசு அறிவித்து உள்ளது. இதனால், பொதுமக்கள் கோயிலுக்குச் சென்று வணங்க இயலுமா என்றச் சந்தேகம் எழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சனி பகவானை தரிசிக்க இந்து சமய அறநிலையத் துறையானது, புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஆன்லைனில், திருநள்ளாறு சனீஸ்வரரை தரிசிக்க புக் செய்யலாம்.

வருகின்ற 27ம் தேதி முதல் ஜனவரி மாதம் வரை சுமார் 48 நாட்களுக்கு, சனி பகவானை தரிசனம் செய்வதற்கு புக் செய்யலாம் என்றுக் கூறப்படுகின்றது. சனிப் பெயர்ச்சியினைத் தொடர்ந்து, சுமார் 48 நாட்களுக்கு சனி பகவானை வணங்கலாம். அவ்வாறு வணங்குவதுப் பல நன்மைகளைப் பெற்றுத் தரும்.

HOT NEWS