திருப்பதி லட்டு விற்பனைக்கு வந்தது! கெட்டுப் போயிரும்னு பயமோ?

24 May 2020 அரசியல்
ttdladdu.jpg

ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தான மையங்களுக்கு, இரண்டு லாரிகளில் திருப்பதி லட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது.

இதனால், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக, திருமலை திருப்பதி கோயிலானது மூடியே உள்ளது. பொதுமக்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், அந்தக் கோயிலின் உலகப் பிரசித்திப்பெற்ற லட்டானது, தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளது.

இது குறித்து, தேவஸ்தானம் தரப்பில் கூறுகையில், வாட்ஸ்ஆப், ஈமெயில் உள்ளிட்டவைகள் மூலம், பக்தர்கள் தங்களுக்கு லட்டு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அதனையொட்டியே, தற்பொழுது லட்டுகளை திருப்பதி தேவஸ்தான மையங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகின்றது. விரைவில், அனைத்து திருமலை தேவஸ்தான மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

மே 25ம் தேதி முதல், அனைத்து திருமலை திருப்பதி மையங்களிலும் லட்டு விற்கப்பட உள்ளன. ஒரு லட்டு 25 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. இதன் உண்மை விலை 50 ரூபாயாகும். தற்பொழுது ஆந்திராவில் உள்ள விஜயநகரம், காகுளம், விசாகப்பட்டினம், கோதாவரி, குண்டூர், கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களுக்கு லட்டுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், இந்த லட்டுக்கள் ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கே கெட்டுப் போகாமல் இருக்கக் கூடியவை. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தயாரிக்கப்பட்டு வந்த லட்டுகள் கெட்டுப் போய் நஷ்டம் ஏற்படாமல் இருக்க, விற்பனைக்கு வந்துள்ளதாக பலரும் தங்களுடையக் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS