திருப்பதியில் ஊரடங்கு! அடங்காத தேவஸ்தானம்! முன்னாள் அர்ச்சகர் பலி!

21 July 2020 அரசியல்
thirumalai1.jpg

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், திருப்பதியில் ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்த சூழ்நிலையில், திருப்பதியின் வருவாய் ஊரடங்கின் காரணமாக முற்றிலும் குறைந்துவிட்டது. கோயிலின் செலவுகளுக்கேப் பணம் இல்லாத நிலை ஏற்பட்டதால், அரசு அனுமதியுடன் திருப்பதி தேவஸ்தானம், கோயிலைத் திறந்தது.

ஒரு நாளைக்கு 50,000 முதல் 60,000 பேர் தரிசனம் செய்து வந்த நிலையில், தற்பொழுது 8,000 முதல் 30,000 பேர் வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும், திருப்பதி கோயிலின் உண்டியல் வருவாய் மட்டும் குறையவே இல்லை. இந்த சூழ்நிலையில், திருமலை திருப்பதி கோயிலில் பணிபுரிந்த அர்ச்சகர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் காவலர்கள் என 150 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால், திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் அவர்கள், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகின்ற காரணத்தால், கோயிலினைத் தற்பொழுது மூட வேண்டும் என்றுப் பலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பண நெருக்கடி காரணமாக, கோயிலினை மூடும் முடிவனை தேவஸ்தானம் எடுக்க மறுத்துவிட்டது. அதற்குப் பதிலாக, இலவசத் தரிசனத்திற்கான டோக்கனை தற்பொழுது ரத்து செய்து உள்ளது.

இந்நிலையில், திருப்பதியில் தற்பொழுது ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்னாள் அர்ச்சகர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். அவர் தற்பொழுது பணியில் இல்லை எனவும், அவர் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார் எனவும், தேவஸ்தானம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS