தன்னை சித்த மருத்துவர் எனக் கூறி வந்த திருத்தணிகாச்சலம், சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும், கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தன்னுடைய முகநூல் பக்கத்தின் மூலம், தன்னால் கொரோனா வைரஸைக் குணப்படுத்த இயலும் எனவும், இதற்கான மருந்தினைத் தான் வைத்துள்ளதாகவும் அவர் தொடர்ந்து கூறி வந்தார்.
அவர் மீது, ஹோமியோபதி மருத்துவக் கழகத்தின் இயக்குநர் போலீசில் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, அரசுக்கு எதிராக தகவல்களை வெளியிட்டதாகவும், பொய்யான செய்திகளைப் பரப்பியதற்காக்கவும், தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்படார்.