சித்த மருத்துவர் தணிகாச்சலத்திற்கு ஜாமீன்! நீதிமன்றம் வழங்கியது!

10 July 2020 அரசியல்
thiruthankichalam1.jpg

சித்த மருத்துவர் தணிகாச்சலத்திற்கு ஜாமீன் வழங்கி, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த மே மாதம் 5ம் தேதி அன்று, மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், தணிகாச்சலத்தின் மீது, இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தனர். பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டமும் பயன்படுத்தப்பட்டு இருந்தது. பாரம்பரியமாக அவருடையக் குடும்பத்தினர் சித்த மருத்துவத்தில் இருந்து வருகின்றனர்.

அவருடைய மனைவி சித்த மருத்துவம் முறையாகப் பயின்றவர். அவருடையப் பெயரினை பயன்படுத்தி, பல பேரிடம் ஆயிரக்கணக்கில் மருந்து தருகின்றேன் என ஏமாற்றி வந்துள்ளார். மேலும், தேனியில் உள்ள தன்னுடைய சொந்தக் கிடங்கில், அச்சிடப்படாத மருந்தினைத் தயாரித்து வழங்கி வந்ததும், போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர். மேலும், அவைகளையும் கைப்பற்றினர். பலர் இவர் மீது சராமாரியாகப் புகார் அளித்து வந்தனர்.

இவர் தன்னிடம் கொரோனாவிற்கு மருந்து இருப்பதாகக் கூறினார். அதுமட்டுமின்றி, தன்னால் கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்த இயலும் எனவும் அவர் கூறினார். இதனால், இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், இவர் சென்னையை விட்டு வெளியில் செல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன், ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

HOT NEWS