பரம்பரை வைத்தியர் என்ற பட்டம் ரத்து! தணிகாச்சலத்தின் பலப் பித்தலாட்டங்கள்!

21 May 2020 அரசியல்
thiruthankichalam.jpg

கொரோனா வைரஸிற்கு தன்னிடம் மருந்து உள்ளது எனக் கூறி, சமூக வலைதளங்களில் பரபரப்பினை ஏற்படுத்தியவர் திருத்தணிகாச்சலம். இவர் தற்பொழுது போலீசாரால் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இவர் மீது பலப் புகார்கள் நாளுக்கு நாள் வந்து கொண்டே உள்ளன. தன்னை சித்த வைத்தியர் எனக் கூறிக் கொள்ளும் திருத்தணிகாச்சலம், பிஎஸ்சி கெமிஸ்ட்ரி மட்டுமே பயின்றவர். இவருடைய மனைவி, சித்த மருத்துவத்தினை முறையாகப் பயின்றவர். இவருடைய தந்தை பூச்சிக் கடி, விஷக்கடி உள்ளிட்டவைகளுக்கு மருத்துவம் செய்தவர். அதனால், அவருக்கு இந்திய சித்த மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கவுன்சிலானது, பாரம்பரிய மருத்துவர் என்றப் பட்டம் வழங்கி கௌரவித்தது.

இந்த சூழ்நிலையில், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வயிற்று வலி, அலர்ஜி, கேன்சர் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர் சிகிச்சை அளிப்பதாகக் கூறி, ஆண்டு சந்தாக் கணக்கில், பல லட்ச ரூபாயினை சம்பாதித்து வந்துள்ளார். இவரிடம் மருந்து மற்றும் மாத்திரை வாங்கி உண்டவர்கள், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உபாதைகளால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளனர்.

இதனை அடுத்து, இவர் மீது, போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது, அவர்களிடம் பேசிய தணிகாச்சாலம், இந்திய மருத்துவக் கழகம் கூறிய மூலிகைகளையே, தான் பயன்படுத்தியதாக தெரிவித்தும் உள்ளார். அவரை மேலும் விசாரிக்கையில், தேனியில் தனக்கு சொந்தமாக உள்ள குடோனில் வைத்து, பல மாத்திரைகளைத் தயாரித்து, உலகம் முழுவதும் பல லட்சங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதை கண்டறிந்துள்ளனர்.

இவர் மீது ஏற்கனவே புகார் வந்ததால் 2014ம் ஆண்டே, இவருக்கு வழங்கப்பட்டு இருந்த பாரம்பரிய மருத்துவர் என்றப் பட்டத்தினை இந்திய சித்தா மற்றும் ஹோமியோபதி கவுன்சில் ரத்து செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS