சிங்கம்பட்டி ஜமீன் மரணம்! ஆயரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி!

26 May 2020 அரசியல்
singampattideath.jpg

மே24ம் தேதி அன்று, சிங்கம்பட்டி ஜமீனின் கடைசி ஜமீன்தாரும், இந்தியாவின் கடைசி ராஜாவுமான, முருகதாஸ் தீர்த்தபதி காலமானார். இதனையொட்டி, அவருடைய இறுதி மரியாதையானது நேற்று நடைபெற்றது.

1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிங்கம்பட்டி சமஸ்தானத்தின், 31வது ராஜாவான நல்லகுட்டி சிவசுப்ரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய ஆளுகையின் கீழ், ஒன்பது கோயில்களும், 80,000 ஏக்கர் நிலங்களும் இருந்து வந்தன.

மேற்கு தொடர்ச்சி மலையினையொட்டி, 74,000 ஏக்கர் நிலம் இவருடைய ஆளுகையின் கீழ் இருந்தது. இருப்பினும், அவை அனைத்தையும் நாட்டிற்காக அர்பணித்தார். தன்னுடைய மூன்றரை வயதில் ராஜாவாக பட்டமேற்றவர். டென்னிஸ் விளையாட்டு, பலே நடனத்தில் தேர்ச்சி பெற்றவராக இருந்து வந்தார். இவர் மரணமடைந்ததை ஒட்டி, அவருக்கு நேற்று இறுதி மரியாதை செய்யப்பட்டது.

ஏற்கனவே, நாடு முழுவதும் வருகின்ற மே31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட, பொதுமக்கள் பல நூறு திரண்டு வந்து அவருக்கு மரியாதை செய்தனர். மேலும், அவரை அடக்கம் செய்யும் பொழுது, திரளான மக்கள் கலந்து கொண்டனர். இதனால், சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியானது.

HOT NEWS