மங்களூரூ விமான நிலையத்தில் 3 வெடிகுண்டுகள்! அதிகாரிகள் விசாரணை!

20 January 2020 அரசியல்
mangalorebomb.jpg

கர்நாடகா மாநிலம் மங்களூரூ விமான நிலையத்தில், மூன்று வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

விமான டிக்கெட் கவுண்டர் பகுதிக்கு அருகில், கேட்பாரற்று அனாதையாக ஒரு பை இருந்துள்ளது. வெகு நேரமாக, அந்த பையானது அங்கேயே இருந்துள்ளதால், சந்தேகமடைந்த பயணிகள் அருகில் இருந்த அதிகாரிக்குத் தகவல் கொடுத்தனர். ஆனால், அந்தப் பையினை யாரும் உரிமைக் கோறாத காரணத்தினால் பயணிகள் அனைவரும் ஒதுக்கப்பட்டனர். உடனடியாக, வெடிகுண்டு நிபுணர்கள் உட்பட போலீசார் அப்பகுதியில் குவிந்தனர்.

அப்பொழுது, அந்தப் பையினை சோதனைச் செய்த வெடி குண்டு நிபுணர்கள், அந்தப் பையில் வெடிகுண்டுகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து, அந்த விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் மற்றும் தரையிறங்க வேண்டிய விமானங்கள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அருகில் உள்ள பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை, வெடிகுண்டு வாகனத்தின் மூலம் எடுத்துச் சென்று பத்திரமாக செயலிழக்கச் செய்தனர். அதன் பின்னரே, பொதுமக்கள் புழங்க அனுமதிக்கப்பட்டனர். பின்னர், விமான நிலையம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. மேலும், மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் வேறு ஏதேனும் வெடிகுண்டுகள் இருக்கின்றனவா எனத் தேடுதல் வேட்டை நடத்தினர். வேறு எதுவும் கிடைக்காததால், மோப்ப நாய்கள் திருப்பி அழைத்துச் செல்லப்பட்டன.

இந்த சம்பவத்தினை அடுத்து, கர்நாடகாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. வெடிகுண்டு வைத்தவர் யார் என்பதைக் கண்டறிய, தனிப்படைகளை அமைத்துப் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

HOT NEWS