12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தப் பாடத்தில் போனஸ் மதிப்பெண்!

28 May 2020 அரசியல்
publicexam.jpg

நடந்து முடிந்துள்ள 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, மூன்று மதிப்பெண்களை போனஸாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும், 12ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியானது தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இந்த சூழ்நிலையில், வேதியியல் பாடத்திற்கு நடத்தப்பட்ட தேர்வில் பிழை இருப்பது தற்பொழுது கண்டறியப்பட்டு உள்ளது.

வேதியியல் பாடத்திற்காக அச்சடிக்கப்பட்ட வினாத்தாளில், மொழிபெயர்ப்பில் பிழை இருப்பது உறுதியாகி உள்ளது. இது குறித்து பதிலளித்துள்ள தேர்வுத்துறை இயக்குநர், அந்த கேள்விகளுக்கு மூன்று மதிப்பெண்கள் வழங்க அனுமதிகப்படுகின்றது எனக் கூறியுள்ளார். அந்தக் கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் அளித்திருந்தாலே, அதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியானது, 12ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

Recommended Articles

HOT NEWS