புதிய நோயால் அவதிப்படும் அமெரிக்கா! 3 குழந்தைகள் பலி! விஞ்ஞானிகள் அச்சம்!

16 May 2020 அரசியல்
pediatricmsic.jpg

அமெரிக்காவில் தான் உலகளவில் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. அந்த நாட்டில் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 70,000க்கும் அதிகமானோர் அந்த நாட்டில் இந்த வைரஸால் மரணமடைந்து உள்ளனர். இந்த சூழ்நிலையில், குழந்தைகளை மையமாக வைத்து, புதிய நோய் ஒன்று பரவி வருகின்றது.

pediatric multi-system inflammatory syndrome என்ற புதிய நோயானது, குழந்தைகளிடம் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் 20 மாகாணங்களில், இந்த நோயானது பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயானது, 200 பேரிடம் பரவி இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது. இது குறித்து, நியூயார்க் மாகாண ஆளுநர் ஆண்ட்ரூஸ் க்யூமோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உடலில் வலி, வயிற்றுப் போக்கு, அலர்ஜி, வாந்தி, சுவாசிப்பதில் பிரச்சனை, கண் எரிச்சல் முதலியவைகள் இந்த புதிய நோயின் அறிகுறிகளாகக் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த நோய் அறிகுறிகள் இருந்தால், உடனடியாகத் தங்கள் குழந்தைகளை மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் சிடிசி அமைப்பானது, இந்த நோய் குறித்து அச்சம் தெரிவித்துள்ளது. இனி வரும் காலங்களில், இந்த நோய் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளதாகவும் அது கவலைத் தெரிவித்துள்ளது. இதுவரை, மூன்று பேர் இந்த நோயால் மரணமடைந்து உள்ளனர். இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு 18 வயது நிரம்பிய பெண் ஆகியோர் இதனால் பலியாகி உள்ளனர்.

ஏற்கனவே, கொரோனா வைரஸால் கடுமையாகத் திண்டாடி வருகின்ற அமெரிக்கா, தற்பொழுது புதியதாக பரவி வருகின்ற வைரஸ் குறித்து அச்சம் அடைந்து உள்ளது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்ற சூழ்நிலையில், தற்பொழுது பரவி வருகின்ற வைரஸ் குறித்துப் போதுமான தகவல்கள் இல்லை என்பதால், அமெரிக்க விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

HOT NEWS