இந்தியா முழுவதும் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே, வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதன் காரணமாக, அனைவருடைய வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. வேலைக்குச் செல்ல இயலாமல், தினக்கூலி வேலை செய்பவர்கள் கடுமையான பாதிப்பினை சந்தித்துள்ளனர். அவர்களுக்க உதவும் பொருட்டு, நடிகர் ராகவா லாரன்ஸ் சுமார் மூன்று கோடி அளவிலான உதவியினை அறிவித்துள்ளார்.
பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர், தங்களுடைய நிவாரண நிதி கணக்கிற்கு தங்களால் இயன்ற உதவியினைத் தாருங்கள் என, வேண்டுகோள் விடுத்தனர். இதனை முன்னிட்டு, பலரும் தங்களால் இயன்ற உதவியினை செய்து வருகின்றனர். இந்நிலையில், ராகவா லாரன்ஸ் பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோரின் ஒவ்வொரு நிதி கணக்கிற்கும் தலா ஐம்பது லட்ச ரூபாயினை வழங்கி உள்ளார்.
பெப்சி அமைப்பினைச் சேர்ந்தவர்களுக்கு சுமார் 50 லட்சமும், நடன கலைஞர்களின் சங்கத்திற்கு சுமார் 50 லட்சமும் அள்ளிக் கொடுத்துள்ளார். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்காக 25 லட்சமும், தினக் கூலிகள் மற்றும் அவருடைய சொந்தத் தொகுதியான ராயபுரம் பகுதிக்கு 75 லட்சமும் அள்ளிக் கொடுத்துள்ளார். இதனைப் பலரும், பாராட்டி வருகின்றனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே, வெறும் 50 லட்சம் தான் தந்தார். அஜித் குமார் 1.25 கோடி ரூபாய் கொடுத்துள்ள நிலையில், லாரன்ஸ் மூன்று கோடி கொடுத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.